சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது- ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்

உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சி கூடம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கோவை விற்பனைக்குழு , கோதவாடி பிரிவு, கிணத்துக்கடவில் சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பாரம்பரிய உணவுகள், பிழிதல், அடுமனை பொருட்கள், உடனடி தயார்நிலை உணவுகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ரூ.750 பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உள்ள, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப துறை பேராசிரியர் மற்றும் தலைவரை தொடர்பு கொள்ளலாம்.