புரட்டாசி மாத விரதத்தால்-மீன் , சிக்கன் , மட்டன் விலை குறைந்தது!

புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகிறார்கள். இந்த மாதத்தில் மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்றவற்றை தவிர்த்து சைவ உணவு வகைகளையே சாப்பிடுகிறார்கள். இதனால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. விற்பனை இல்லாததால் அவற்றின் விலை குறைந்துள்ளது.

மார்க்கெட்டுகளில் மீன் விற்பனை குறைந்துவிட்டதுபோல் வீடுகளில் நேரடியாக மீன் விற்பனை செய்வதும் குறைந்துவிட்டது. இதேபோல் கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பனையும், விலையும் குறைந்துவிட்டது. ஓட்டல்களில் மீன், சிக்கன், மட்டன் விற்பனை கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. பிரியாணி கடைகளிலும் விற்பனை குறைந்துவிட்டது. அதே சமயம் சைவ ஓட்டல்களில் விற்பனை அதிகரித்துள்ளது. சாதாரண சைவ ஓட்டல்களில் கூட இருமடங்கு விற்பனை கூடியுள்ளது.