ஹார்ட்வேர் வியாபாரி வீட்டுக்குள் புகுந்து நகை பணம் திருட்டு.

கோவை மே 23-

கோவை வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சார்தா(55). இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

வழக்கம் போல கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.

பின்னர் குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள 1-வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அடையாளம் தெரியாத மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 6½ கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.42 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.