என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு

டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மாணவ ஆசிரியர்களுக்கு தொழிற்திறன் மேம்பாட்டிற்க்கான ‘இசையோடு கற்பித்தல்’ என்னும் பொருண்மையில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.

உதவிப் பேராசிரியை புவனேஸ்வரி இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கல்லூரி முதல்வர் ராமசாமி வாழ்த்துரை வழங்கினார். கோவை ஜெ.வி.எம். கலைக்கூடத்தின் நிறுவனர் ஜெயஸ்ரீ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். இவர் தனது உரையில் “மாணவ ஆசிரியர்கள் பல்வேறு கவின் கலைகளைப் பயன்படுத்தி கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வணிகவியல் போன்ற பாடங்களை இசையோடு கற்பிக்கும் நுட்பங்களையும் எடுத்துரைத்தார். மாணவ, ஆசிரியர்கள் தங்கள் பாடங்களைக் கற்பிக்கும் போது இசையைப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு தருவதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.