கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் சார்பில் நியூரோ எண்டோகிரைன் புற்றுநோய் கட்டிகள் குறித்த கருத்தரங்கு

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் சார்பில் நியூரோ எண்டோகிரைன் புற்றுநோய் கட்டிகள் குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி தலைமை தாங்கி நிகழ்வினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்விற்கு பி.எஸ்.ஜி. மருத்துவமனை டாக்டர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் வி.ஜி.எம். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் என்.பழனிசாமி கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்த குழுவினரை பாராட்டினார்.

இந்த கருத்தரங்கத்தில் கட்டிகளுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவர்கள் தங்கள் சிகிச்சை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பல்வேறு மருத்துவமனையின் மருத்துவர்களும் இதில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். முதுநிலை மருத்துவமாணவர்கள் உட்பட சுமார் 100 பேர் இதில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.