டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் விருது விழா

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்ரீ நல்ல கவுண்டர் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் மேம்பாட்டுக்கான விருது வழங்கும் விழா கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சரவணன், விருது பெற்றவர்கள் விபரங்களை அறிவித்தார். டாக்டர் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் இயக்குநர் முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் ஓ.டி.புவனேஷ்வரன் தலைமையேற்றார்.

கல்விசார் செயல்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிசார் செயல்பாடுகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களில் 10, 15, 20க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்கள், அலுவலர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.