சூலக்கல்லில் ‘எ ராயல் நெஸ்ட்’ கேட்டட் கம்யூனிட்டி புராஜெக்ட்

சபரி கன்ஸ்டிரக்ஷன்ஸ் டெக்னாலஜீஸ் பி.லிட்., நிறுவனம் கோவை – பொள்ளாச்சி சாலையில், சூலக்கல்லில் ‘எ ராயல் நெஸ்ட்’ என்னும் சீனியர் சிட்டிசன் மற்றும் ரிசார்ட் வில்லாக்களுக்கு ஏற்ற கேட்டட் கம்யூனிட்டி புராஜெக்ட்டினை அறிமுகம் செய்துள்ளது.

இதன் துவக்க விழா திங்கட்கிழமை நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜ் மற்றும் திரைப்பட நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த புதிய புராஜெக்ட்டினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன், சபரி கன்ஸ்டிரக்ஷன்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலபதி, இயக்குனர்கள் அருண், பிரீத்தி அருண், யாவி ஷெல்டர்ஸ் சண்முகம், ராஜகோபாலன், வி.ஜி.விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கீதா மற்றும் பலர் உள்ளனர்.