தேசிய அளவில் நடைப்பயிற்சியை வலியுறுத்தி வாக்கரூ – ன் “வாக்இந்தியாவாக்”

இந்தியாவின் முன்னணி காலணி பிராண்டுகளுள் ஒன்றான வாக்கரூ, ‘வாக்இந்தியாவாக்’ என்ற புதிய பரப்புரை திட்டத்தை தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் கோவையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் வாக்கரூ நிறுவனம், நடை பயிற்சியினால் கிடைக்கும் பலன்களை பற்றி தனது வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரப்புரை திட்டத்தை துவங்கியுள்ளது.

வாக்கரூ நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் குரியன் பரப்புரை திட்டம் பற்றி பேசுகையில், “நடைப்பயிற்சி என்பது, வெறுமனே ஒரு செயல்பாடு மட்டுமல்ல; ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கொண்டிருப்பதற்கான ஒரு சிறந்த பழக்கவழக்கமாகவும் அது இருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே,”வாக்இந்தியாவாக்” பரப்புரை திட்டத்தை தொடங்கி செயல்படுத்துவதில் நாங்கள் தீவிர ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருக்கிறோம்.” என்று கூறினார்.

இப்பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக, #வாக்இந்தியாவாக் என்ற ஒரு சமூக ஊடகப் போட்டி நிகழ்வையும் வாக்கரூ அறிவித்திருக்கிறது. நடைப்பயிற்சியை ஊக்குவிப்பதற்கு தேசிய அளவிலான இந்த மாபெரும் இயக்கத்தின் ஒரு அங்கமாக பொதுமக்களும் பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பை இந்த சமூக ஊடகப் போட்டி வழங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்கும் மற்றும் வாக்கரூ வழங்கும் பரிசு வவுச்சர்களை வெல்லவும், பங்கேற்பாளர்கள் செய்ய வேண்டியது இதுமட்டுமே; தங்களுக்குப் பிடித்தமான நடைப்பயிற்சி அமைவிடத்தில் தாங்கள் நடைப்பயிற்சி செய்யும் ஒரு செல்ஃபி படத்தை எடுக்க வேண்டும் அல்லது 10 கி.மீ. நடைப்பயிற்சி என்ற சவாலை வெற்றிகரமாக பூர்த்திசெய்து அதுகுறித்த ஒரு நிழற்படத்தை எடுக்க வேண்டும். அதன்பிறகு ஒரு செல்ஃபியை தங்களது சமூக ஊடக ஹேண்டில்களில் பதிவேற்றம் செய்து வாக்கரூ மற்றும் #வாக்இந்தியாவாக் – ஐ டேக் செய்து அனுப்ப வேண்டும்.