கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி – பிரான்ஸ் நாட்டுப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் இன்டர்நேஷனல் சென்டர், பிரான்ஸ் நாட்டில் உயர்கல்வி தொடர விருப்பம் உள்ள மாணவர்களுக்கான பிரத்யேக சர்வதேசக் கருத்தரங்கை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதில், பிரான்ஸ் நாட்டின் பல்கலைக்கழகங்களில் ஒன்றான கத்தோலிக் டி லூஸ்ட் (Catholique de l’Ouest) பல்கலைக்கழகத்தின் சட்டம், பொருளாதாரம் மற்றும் மேலாண்மைத் துறையின் இயக்குநர் தாமஸ் பௌர்க்னினருட் மற்றும் பல்கலைக்கழக ஆசியாவின் சர்வதேச ஆட்சேர்ப்பு முகமையாளர் கியாவ்டுவ்ங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்கள் பிரான்சில் உள்ள தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் பிரான்சில் கல்வி உதவித் தொகை மற்றும் மாணவர்களுக்கு சர்வதேச வாழ்க்கையைப் பற்றியும், முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் திட்டத்தையும் குறித்து விரிவாக பேசினர்.

தொடர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் கத்தோலிக் டி லூஸ்ட் பல்கலைக்கழகத்தின் ரெக்டரான டொமினிக் வெர்மெர்ஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர் .

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்பது உள்ளிட்ட பலதரப்பட்ட கூட்டு முயற்சிகளை உள்ளடக்கியது.

மேலும் இந்த ஒப்பந்தம், இரு கல்வி நிறுவனங்களும் அறிவியல் மற்றும் கல்வி கருத்து, ஆராய்ச்சிக் கட்டுரைகளை பரிமாறிக்கொள்ளவும், ஆன்லைன் சர்வதேசக் கற்றலில் (COIL) ஒத்துழைக்கவும் மற்றும் கூட்டு இரட்டை டிப்ளோமாக்கள் மற்றும் கூட்டு வெளியீடுகளுக்குப் பணி செய்யவும் வழிவகுக்கும் .

இந்த ஒப்பந்தம் கல்வி, கலாச்சார எல்லைகளை விரிவுபடுத்துவதுடன் கல்வி மற்றும் தொழில்முறை அனுபவங்களை மேம்படுத்துவதற்கான தனித்துவமான வாய்ப்புகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.