எஸ்.என்.எஸ் தொடக்கப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

எஸ்.என்.எஸ் அகாடமி தொடக்கப்பள்ளியின் மழலையர் பட்டமளிப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு டாக்டர் நித்யா வி பாஸ்கர் மற்றும் எஸ்.என்.எஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கினர். இதில் 34 குழந்தைகளுக்கு சான்றிதழ்களும், பட்டமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் பாபி மேத்யூ, துணை முதல்வர் அபிராமி, ஐக்யூஏசி (IQAC) ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.