காவல் நிலைய மேற்கூரையில் பறவைகளுக்கு தண்ணீர்

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனியார் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து காவல் நிலையத்தின் மேற்கூறையில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு ஏதுவான மண் சட்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா, ராயல் செயின், நேச்சர் அனிமல் கன்வரன்சி, என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், சென்னை, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொது இடங்களில் தண்ணீர் குடிப்பதற்கான மண்சட்டிகள் வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பகுதியில் பறவைகளுக்கு கோடைகாலத்தில் தண்ணீர் வைப்பதற்கான திட்டத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது மாநகர காவல் நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர்களிடம் இந்த மண்பானைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கோடைகாலத்தை முன்னிட்டு இந்த பணியை செய்வதாகவும், பறவைகளுக்கும் வளர்ப்பு விலங்குகளுக்கும் தண்ணீர் அத்தியாவசியம் என தெரிவித்தார்.