நேரு கல்லூரியில் சாதனை புரிந்த பெண்களுக்கு சிறப்பு விருது

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நேரு சர்வதேச மகளிர் தின பெண்களுக்கான சிறப்பு விருது’ வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் நேரு கல்வி நிறுவனத்தின் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணகுமார் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக அவிநாசி நீதித்துறை குற்றவியல் நடுவர் ஷபீனா கலந்துகொண்டார்.

விழாவின் சிறப்பு அம்சமாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களை சிறப்பிக்கும் வகையில் 19 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.