பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மருத்துவக் கலைச்சொல் கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம், பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஆகிவை இணைந்து மருத்துவக் கலைச்சொல் அகராதித் தொகுப்புத் திட்டக் கருத்தரங்கம் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நடைபெற்றது.

இதில் பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் தமிழ் சங்கத்தின் செயலாளர் முருகேசன் வரவேற்புரை வழங்கினார். மருத்துவக் கலைச்சொல் அகராதித் தொகுப்பு திட்டத்தின் மொழிவல்லுநர் கண்ணன் நோக்கவுரை ஆற்றினார். சென்னை, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தின் இயக்குநர் விசயராகவன் தலைமையுரை வழங்கினார்.

பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குநர் புவனேஸ்வரன் சிறப்புரை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் ‘எந்திர நுண்துவார வழி நெஞ்சக அறுவை சிகிச்சை’ புத்தகம் வெளியிடப்பட்டது