ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 18 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய செயலர் விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ், ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தீபானந்தன் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நிர்வாக அறங்காவலர் லக்ஷ்மி நாராயணசுவாமி தலைமையுரையில், தரமான சிகிச்சை அளிப்பதிலும், எதிர்காலத்தில் உயர் வெற்றிகளைப் பெறுவதற்கு இளங்கலை கல்வியில் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் சமூகப் பொறுப்பையும் வலியுறுத்தினார். மருத்துவம் தேவைப்படும் மக்களை அணுகி சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விஜயகார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்., தனது பட்டமளிப்பு தின உரையில், எப்போதும் சவால்களை எதிர்பார்த்து அவற்றை எதிர்கொண்டு வெற்றியை அடைய உழைக்க வேண்டும். சரியான பழக்க வழக்கங்கள் மற்றும் சரியான செயல்முறை மூலமாக குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஆதரவு அமைப்பை ஏற்படுத்தி கொள்ளுதல் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள உதவும். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை நிலையானதாக வைத்திருக்க பொருளாதார நிர்வாகமும் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார்.

இதனைத் தொடர்ந்து, அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தலைமை விருந்தினரிடமிருந்து எஸ்.ஆர்.டி.சி.ஹெச் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றனர். 92 பி.டி.எஸ் பட்டதாரிகள், 8 எம்.டி.எஸ் முதுகலை பட்டதாரிகள் சான்றிதழ்களைப் பெற்றனர்.