கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கம்

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியில் மனித உடலியக்கம் மற்றும் நோயாளிகளை இடமாற்றம் செய்யும் போது கையாளும் நுட்பங்கள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

நோயாளிகள் மற்றும் உடல் ஊனமுற்ற நோயாளிகளை செவிலியர்கள் தூக்கும் பொழுது சரியான இடமாற்ற முறைகளை பயன்படுத்துவதில்லை என்றால் அது நோயாளிகளுக்கும் மற்றும் செவிலியர்களுக்கும் தசைக் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை உணர்த்தும் நோக்கமாக கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியில் இரண்டு நாட்கள் மனித உடலியக்கம் மற்றும் நோயாளிகளை இடமாற்றம் செய்யும் கருத்தரங்கம் நடைபெற்றது.

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரி முதல்வர் மாதவி, கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரி முதல்வர் கார்த்திக் பாபு ஆகியோரால் நிகழ்ச்சி தொடங்கிவைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பிசியோதெரபி கல்லூரி பேராசியர்களால் செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது. இதில் இளநிலை செவிலிய மாணவிகள் கலந்து கொண்டனர்.