என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

டாக்டர்.என்.ஜி.பி. தொழில்நுட்பக்கல்லூரியில் ‘நிதியின் சமகால போக்குகள்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 700 பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிசாமி தலைமை தாங்கினார். கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குநரும், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவருமான கனகசபாபதி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

‘பெருநிறுவனங்களின் நிதியை நிர்வகிப்பது: சமீபத்திய போக்குகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில், கோயம்புத்தூர், ரூட்ஸ் குழு நிறுவனத்தின், தலைமை நிதி அதிகாரி ரவி , ‘எண்முறை வங்கி – இன்று மற்றும் நாளை’ என்ற தலைப்பில் கரூர் வைசியா வங்கி துணை பொது மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) சரவணன், ‘நிதிநிலை இலக்குகளை அடைவதற்கான முன்னணி மற்றும் பின்னடைவு நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில், கோவை அக்கோபீடியா கணக்கியல் மற்றும் நிதி பள்ளி, இயக்குனர் பிரபு கேசவன் மற்றும் நிதிசார் தொழில்நுட்பம் மற்றும் தடயங்கள்’என்ற தலைப்பில் டாக்டர்.என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் கல்வி இயக்குநர் முத்துசுவாமி கலந்துரையாடினர்.

‘கிரிப்டோ கரன்சி மற்றும் குற்றவியல் பார்வைகள்’ என்ற தலைப்பில் தொழில்நுட்ப சட்ட ஆலோசகர் மற்றும் இணையத்தின் வழி குற்ற ஆய்வாளர் ரவிச்சந்திரன், ‘எதிர்கால பணம்’ பற்றி வழக்கறிஞர் லோகேஷ் பாபு, ‘வங்கி துறையில் சீர்குலைவு மற்றும் புதுமை’ பற்றி தலைப்பில் ட்ரெகோன் கல்விச்சாலை தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசன், ‘நிதி ஆய்வாளரின் இன்றியமையாமை’ என்ற தலைப்பில் டாக்டர்.என்.ஜி.பி. தொழில்நுட்பக்கல்லூரி மேலாண்மைத்துறை பேராசிரியர் சதீஷ் குமார் கலந்துரையாடினர்.