இளம்பாரதி விருதாளருக்கு பாராட்டு விழா

பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை சார்பில் ஆண்டுதோறும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இலக்கியப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இளம்பாரதி விருது வழங்குவது வழக்கம்.

இவ்வாண்டு கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் பி.காம் மாணவி அனுகீர்த்தனா பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் இளம்பாரதி விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் கோவை மாவட்டத்தின் ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

கே.பி.ஆர் கல்லூரி மாணவி விருது பெற்றதைப் பாராட்டும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பாலுசாமி, கல்லூரியின் செயலர் & ஆலோசகர் ராமச்சந்திரன் மாணவியைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

வணிகவியல் துறை புலமுதன்மையர் குமுதாதேவி, கணினிஅறிவியல் துறை புலமுதன்மையர் சர்மிளா, தமிழ்த்துறையின் தலைவர் முத்துக்குமாரவடிவேல் ஆகியோர் உடனிருந்து வாழ்த்தினர்.