மெஸ்ஸியை கௌரவிக்க அர்ஜெண்டினா அரசு திட்டம் !

36 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் நாட்டுக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியை கௌரவிக்க அர்ஜென்டினா அரசு முடிவெடுத்துள்ளது.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் 23 வது  நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தியுள்ளார்.  அதனை தொடர்ந்து 36-வது நிமிடத்தில்  டி மரியா கோல் அடித்தார்.

மேலும் தொடர் போட்டியில்   உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது. உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் அவரது  ரசிகர்கள் உற்சாகமாக  கொண்டாடிவருகின்றனர்.

இது தொடர்பாக வெளியான செய்தியில், அர்ஜென்டினா பணமதிப்பின்படி ஆயிரம் மதிப்புடைய நோட்டில் 1,000 என்பதை மெஸ்ஸியை குறிக்கும் விதமாக ‘IO’ என அச்சடிக்கவும், அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியை குறிக்கும் விதமாக “La Scaloneta” என்ற வார்த்தையை அச்சிடுவது குறித்து அந்நாட்டு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆலோசனை  நடத்தி வருகின்றனர் .