சச்சிதானந்த பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் கோயம்புத்தூர் கார்மல் கார்டன் தலைமையாசிரியர் ஆரோக்கிய ததாயுஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

தொடக்க நிகழ்வாக, குழந்தை இயேசுவின் பிறப்பினைச் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில், இயேசுவின் பிறப்பை உலகிற்கு அறிவிக்கும் நிகழ்வினை பள்ளி மாணவ மாணவியர் நிகழ்த்தினர். தொடர்ந்து குழந்தை இயேசு பிறப்பைப் பற்றி நாடகம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர், ஆரோக்கிய ததாயுஸ் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துரையில், நாம் தடுமாறுகின்ற போது இறைவன் மனித வடிவில் உதவி செய்வார். மனிதனோடு வாழ்வதற்காகவே மனிதனாகப் பிறந்தார் இயேசு. இயேசு பிறந்த தினத்தைச் சிறப்பாகப் பல ஆண்டுகளாகத் தனித்துவமான முறையில் கொண்டாடி வருகின்ற பள்ளிக்குப் பாராட்டுக்கள் என்று கூறினார்.

தலைமை உரையாற்றிய பள்ளிச் செயலர் கவிதாசன், இயேசு கிறிஸ்து உலக மக்களிடத்தில் அன்பினைக் காட்டினார். தன்னிடம் இருப்பவற்றை மற்றவருக்குப் பகிர்ந்தளித்தார். இளம் பருவத்தினரான நீங்கள் அனைவரும் மற்றவரிடத்தில் அன்பு காட்டுவதனையும், பகிர்ந்தளித்து வாழ்வதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, கல்வி ஆலோசகர் கணேசன், துணைமுதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.