மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை – கோவை ஆட்சியர்

கேரளா மற்றம் பிற மாநிலங்களில் இருந்து அகற்றப்படும் மருத்துவ மற்றும் பிற திட கழிவுகளை தமிழக எல்லைப்பகுதிகளில் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கேரளா மற்றும் பிற மாநிலத்திலிருந்து சட்ட விரோதமாக மருத்துவ மற்றும் பிற திடக்கழிவுகளை லாரிகளில் ஏற்றி வந்து தமிழக எல்லைப்பகுதிகளில் கொட்டப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம், காவல் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மேலும், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கழிவு பொருட்கள் வருவது கண்காணிக்கப்படுகிறது. சட்ட விரோதமாக தமிழக எல்லைகளில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது.

இதனால், கழிவுகளை சட்ட விரோதமாக ஏற்றி வரும் வாகனங்கள் மீதும் அதன் உரிமையாளர்கள் மீதும் கடுகையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எல்லைப்பகுதிகளில் இருக்கும் கிராமங்களில் பயன்படாமல் இருக்கும் நிலங்களை கழிவுகளைள் கொட்ட குத்தகைக்கு விடப்படுவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு குத்தகைக்கு விடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரளாவில் இருந்து கோழி, மருத்துவ மற்றும் திட கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் – 0422 2301114, collrcbe@nic.in; போலீஸ் கமிஷனர் – 0422 2300250, cop.cbe.tncctns.gov.in; மாசு கட்டுபாடு வாரியம் வடக்கு – 0422 2444608, 0422 2433826, deecbn@tnpcb.gov.in; மாசு கட்டுபாடு வாரியம் தெற்கு – 0422 2675608, deecbs@tnpcb.gov.in; பறக்கும் படை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியர் திருப்பூர் – 0421 2241131, eefstpr@tnpcb.gov.in. தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.