‘குறிஞ்சி வனம்’ திட்டத்தின் கீழ் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் பிள்ளையாளர் புரம் வனப்பகுதியில் கோவை மாவட்ட வனத்துறை சார்பில் “குறிஞ்சி வனம்” என்ற பெயரில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி துவங்கியது.

இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு மரக்கன்று நடவு செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த வனத்தில் இளைப்புரசு, வாகை, அத்தி, மூங்கில், தேக்கு என 200 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், சலீம் அலி பறவைகள் சரணாலய முதுநிலை அறிவியலாளர் பிரமோத், மதுக்கரை வனச்சரகர் சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.