கோவையில் சிவா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் உள்ளே ஜன்னல்கள் , கதவுகள் கடை திறப்பு

கோவையை அடுத்த ப்ரூக்பீல்ஸ் சாலையில் சிவா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின், உள்ளே அபர்ணா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் விற்பனையகத்தை இன்று திறந்து உள்ளனர். சிவா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவா இந்த கடையை திறந்து வைத்தார்.  ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் , தமிழகத்தில் முதல்முறையாக கோவை மாவட்டத்தில் இந்த கடையை திறந்து உள்ளனர். இந்த நிறுவனத்தில், யு பி வி சி ஜன்னல்கள் , கதவுகள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது யு பி வி சி கதவுகள் பிரபலமாகி வரும் சூழலில், பொதுமக்களை கவரும் வகையிலான ஜன்னல் , கதவுகள் இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. ஜெர்மன் தரத்தில் இந்த கதவுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால்  ஆண்டு முழுவதும் பராமரித்தல் செலவு தேவையில்லை என கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக காலநிலைக்கு ஏற்றார்போலவும், எளிதில் தீப்பிடிக்காததாகவும், இந்த  கதவுகள் இருக்கும் என கூறி உள்ளனர். பல்வேறு வண்ணங்களில் இந்த ஜன்னல், கதவுகள் உள்ளது. ஏராளமான பொதுமக்கள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.