பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு வருடம் பட்டய பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழா பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிரகாசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ் வரவேற்புரை வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக (Schneider Electric India Pvt Ltd) கோவை இயக்குனர் மாயக்கர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றி பட்டங்களை வழங்கினார்.