ஓணம் பண்டிகை நிகழ்வு: வானதி சீனிவாசன் பங்கேற்பு

உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அப்பகுதியில் உள்ள மலையாள மக்களுடன் சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

இதில் அவர் பெண்களுடன் இணைந்து பாரம்பரிய ஓணம் நடனம் ஆடி சிறப்பித்தார்.