இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் கருவியியல் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) உடன் இணைந்து “மேம்படுத்தப்பட்ட கருவிகளின் மூலம் நுண்ணறிவு விவசாயம்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கத்தை நடத்தியது.

இக்கருத்தரங்கத்தை சர்க்கரை இனப்பெருக்க நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானிகள் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் ஜெயா மற்றும் மின்னணுவியல் மற்றும் கருவியியல் துறையின் தலைவர் ஆனந்த் முன்னிலை வகித்தனர்.

இக்கருதரங்கத்தில் சர்க்கரை இனப்பெருக்க நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானிகள் அப்புனு மற்றும் மகேஷ் உயிரியல் தொழில்நுட்பம் மூலமாக விவசாய உற்பத்தியை பெருக்கும் முறைகளை பற்றி விரிவாக கலந்துரையாடினர்.

மேலும் ட்ரோன் மற்றும் ரோபோக்களின் மூலம் விவசாயம் செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு தேசிய அளவில் இருந்து பல்வேறு தொழில்நுட்ப கல்லூரிகளை சார்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.