கே. பி. ஆர். கல்லூரியில்  “வள்ளலாரும் பெரியாரும்” புத்தகம் வெளியீடு

கே. பி. ஆர். கல்லூரியில் “பண்டைய மருத்துவமும் தொழில் நுட்பமும்“ என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு நிறைவு நாள் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் “வள்ளலாரும் பெரியாரும்”என்ற நூலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு “வள்ளலாரும் பெரியாரும்” என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினர்.

மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவள்ளுவன், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் துறை தலைவர் ஜெய ராஜமூர்த்தி, வள்ளலார் வம்சாவளி பேரன் உமாபதி, அமெரிக்க சித்தவேத பல்துறைகல்வி மையத்தின் துணைவேந்தர் சண்முகமூர்த்தி லட்சுமணன்  இந்திய மருந்தகம் மற்றும் ஹோமியோபதி இயக்குனர் கணேஷ். கே. பி. ஆர். கல்வி குழுமம்  நிறுவனத்தின்  தலைவர் ராமசாமி மற்றும்  கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் அகிலா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவை சிறப்புரையாற்றி வரவேற்ற கே.பி.ஆர். கல்வி குழுமத்தின் நிறுவனத்தின் தலைவர் ராமசாமி, “பண்டைய மருத்துவமும் தொழில் நுட்பமும்” என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு நிறைவு விழாவில் வள்ளலார் வம்சாவளி பேரன் உமாபதி எழுதிய “வள்ளலாரும் பெரியாரும்” என்ற நூலை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியா இருக்கிறது. மேலும், இந்த நூலை படிக்கவேண்டுமென்று ஆர்வமும் அதிகமாக உள்ளது என்றார்.

தமிழ் நாடு சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன்,பேசிய போது, நான் இந்த நூலை படித்தேன். எனக்குள் பல மாற்றங்கள் நிகந்தது. இந்த புத்தகத்தில் மனிதர்களையும் மற்ற உயிர்களையும் மதிக்க வேண்டும். அசைவம் சாப்பிட கூடாது. மற்ற உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நினைப்பவர். பெரியார் என்பவர்  சாதி, மதம் , சடங்கு சம்பிரதாயம் போன்றவற்றை எதிரித்து மனிதநேயத்தை வளர்க்கிறார். ஆனால், இருவருமே மனிதநேயத்தை நேசிப்பவர்கள் தான் என தெரிவித்தார்.

தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவள்ளுவன், ” வள்ளலார் போல் வாழ்வது கடினம்.  ஆனால், வள்ளலாரின் நெறிமுறைகளை கடைபிடிப்பது எளிது. பசி என்று வந்தால் உணவு அளிக்கவேண்டும். அன்பு காட்டவேண்டும் என்ற மனிதநேயத்தின் அடிப்படை தத்துவத்தை பின்பற்று வருகிறார் வள்ளலார். மாணவர்களாகிய நீங்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.