ரத்தினம் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வு துவக்கம்

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஸ்போர்ட்ஸ் கோட்டா அடிப்படையில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உணவு மற்றும் தங்கும் விடுதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான தேர்வு திங்கட்கிழமை துவங்கியது. 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வில் வாலிபால், பேஸ்கட்பால், கபடி, கிரிக்கெட், வெயிட்லிப்டிங், பவர்லிப்டிங், டேக்வொண்டோ, பாக்ஸிங், ஃபுட்பால் மற்றும் தடகள போட்டிகள் நடைபெறவுள்ளது.

விளையாட்டுக்களில் ஆர்வம் மற்றும் திறமையான மாணவ மாணவியர்கள் தேர்வில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 82202 84567 மற்றும் 86101 75821 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.