கே.எம்.சி.ஹெச்  மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வாரம் – 2018

உலகத் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு சூலூர் கே.எம்.சி.ஹெச்  மருத்துவமனையில் இன்று ( 01.08.18)  கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்த கருத்தரங்கை கே.எம்.சி.ஹெச்  மருத்துவமனை துணை தலைவர் டாக்டர் தவமணி D பழனிசாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து  சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மருத்துவ இயக்குனர் டாக்டர் ராகினி வரவேற்புரையாற்றினார் .

 குழந்தைகள் நல மருத்துவர்கள் டாக்டர்  திவ்யா, தாய்ப்பால் கொடுப்பதினால் சேய்க்கு கிடைக்கும் நன்மைகளை பற்றியும், டாக்டர் விவேக் செந்தூர், தாய்ப்பால் தான் முதல் தடுப்பு மருந்து என்பதனை பற்றியும் எடுத்துரைத்தார்கள். இறுதியாக மகப்பேறு மருத்துவர் வனிதா நல்ல தம்பி,  தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் கூறினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பற்றி மருத்துவமனை துணை தலைவர் டாக்டர் தவமணி D பழனிசாமி, கூறுகையில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தொடர்ந்து நடத்திவருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 150 க்கு   மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இவர்களுடன் தலைமை  இயக்க அலுவலர் டாக்டர் சிவகுமரன்  மற்றும் சூலூர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை பொது மேலாளர் திரு.சோமசுந்தரம்  கலந்து கொண்டனர்.