யுவா பவுண்டேஷன் சார்பில் உலக தாய்ப்பால் வாரம்

சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் , லிட்டில் டென்டிஸ்ட் நிறுவனம் மற்றும் கோவை பேரன்டிங் நெட்வொர்க் சார்பில் தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பல்வேறு பகுதிகளில் தாய்பால் ஊட்டும் அறையை துவங்க உள்ளனர்.

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வாரத்தில்  கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அனைத்து தாய்மார்களும், தங்களது குழந்தைகளுக்கு தடையின்றி தாய்ப்பால் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோவையில் உள்ள சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் நிறுவனம் மற்றும் லிட்டில் டென்டிஸ்ட் நிறுவனம் மற்றும் கோவை பேரன்டிங் நெட்வொர்க் இணைந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தாய்பால் ஊட்டும் அறையை கொண்டு வர உள்ளனர். தாய்பால் வாரத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து இந்த தாய்பால் ஊட்டும் அறையை துவக்கி வைக்க உள்ளனர். இதில் நான்கு தாய்மார்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து தாய்பால் கொடுக்கும் வகையில் உருவாக்கி உள்ளதாக தெரிவித்து உள்ளனர். கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் லஷ்மி, பயிற்சி ஆட்சியர் சினேஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த தாய்பாலூட்டும் அறையை துவக்க உள்ளனர். தாய்ப்பாலில் அதிகமாக புரத சத்தும் , நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள்ளதாகவும், விட்டமின்கள் அதிகமாகவும் , எளிதில் செரிமானம் ஆககூடியதும் இருப்பதால், இதுபோன்ற பயன்கள் குறித்து தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உள்ளதாக தெரிவித்து உள்ளனர். கோவை மாவட்டத்தில், மக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், சிங்காநல்லூர், போத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த அறையை அமைக்க உள்ளனர். இந்த தாய்பாலூட்டும் அறையில் நிரந்தரமாக இருக்கும் எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.