ரம்ஜான் பண்டிகை: கோவையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழுகை

புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.

நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் புனித பண்டிகையான ஈகை திருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தை புனித மாதமாக கருதுகிறார்கள். இந்த மாதத்தில் தான் இறைதூதர் நபிகள் நாயகம் திருகுரானை மக்களுக்காக அருளிய மாதம்.

இந்த மாதத்தில் முதல் நாள் முதல் 30 நாட்கள் நோன்பு இருந்து, ஏழை எளியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து ஈகை திருநாளாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் கோவையில் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரும்புக்கடை பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில்கூடி தங்களது முக்கிய கடமையான தொழுகையை நிறைவேற்றினர்.