‘பாஜகவை அறிந்து கொள்ளுங்கள்’ நிகழ்ச்சி: வானதி சீனிவாசன் பங்கேற்பு

பாரதிய ஜனதா கட்சியின் 42வது நிறுவன தினத்தை ஒட்டி, கட்சியின் தலைமையகத்தில் ‘பாஜகவை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற நிகழ்ச்சி புதன்கிழமையன்று நடைபெற்றது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் 13 நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். முன்னதாக இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த வெளிநாட்டு தூதர்களை அவர் வரவேற்றார்.