உலக நன்மைக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் மகா குபேரர் யாகம்

உலக நன்மைக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சாலவரையில் உள்ள குபேரர் கோவில் சிறப்பு மகா யாகம் 7 நாட்கள் நடைபெற்றது. இந்த மகாயாகம் ஏப்ரல் 17-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த மகா யாகத்திற்காக பத்ரிநாத் அருகே உள்ள பாண்டுகேஸ்வரில் இருந்து புனித மண் எடுத்து விமான மூலமாக கோவைக்கு கொண்டுவரப்பட்டது.

பத்ரிநாத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மண்ணை, கோவை ஆர்ய வைத்ய சாலை தன்வந்திரி கோவிலில் வரவைத்து, வைத்திய சாலையின் செயல் இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணதாஸ் வாரியரால் ஊர்வலமாக வாளையாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை 7.30 மணிக்கு சம்பூஜ்ய தயானந்தாஸ்ரமம் ஓலச்சேரி மடாதிபதி சுவாமி கிருஷ்ணாத்மானந்த சரஸ்வதியால் (தர்மாச்சார்ய சபையின் மாவட்டத் தலைவர்) குபேரர் கோவில் நிர்வாக அறங்காவலரும் இந்த ஹோமத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ஜித்தின் ஜெயகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டு மகா யாகம் நடைபெற்றது.

இந்த 7 நாட்கள் நடைபெற்ற தொடர் மகா யாகத்தை கோவில் நிர்வாகம் மேற்கொண்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.