இந்துஸ்தான் கல்லூரியில் தற்காப்பு கலை பயிற்சி

லயன்ஸ் கிளப் ஆப் இந்துஸ்தான் மற்றும் கணினி அறிவியலின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பில்டுங் குவாலிடி ஆஃ லைஃப் எனர்ஜி வொர்க் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சியை வழங்கியது.

இதில் லயன்ஸ் கிளப் பொருளாளர் ஸ்ரீ லக்ஷனா வரவேற்புரை வழங்கினார். இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளை நிர்வாகி மற்றும் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி தலைமை உரையாற்றினார். லயன்ஸ் கிளப் ஆப் இந்துஸ்தான் தலைவர் ஸ்ரீ ஹரிஹரன் விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.

இதில் வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 38 மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு தாய்ச்சி மற்றும் சிகோங்கின் தற்காப்பு கலையை முனைவர் ரங்கராஜ் பயிற்சி அளித்தார்.