உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி வருகிறோம் – சத்குரு

உக்ரைனில் போர் காரணமாக சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் மத்திய அரசுடன் சேர்ந்து உதவி வருவதாக ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

மண் வளத்தை பாதுகாக்க சர்வதேச அளவிலான அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈஷா நிறுவனர் சத்குரு 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்.

இதற்காக அவர் கோவை வாலாங்குளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் லண்டன் செல்வதற்காக விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார். அப்போது சத்குரு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மண்ணை காப்பாற்ற உலகத் முழுவதும் சேர்ந்து மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. உலக விஞ்ஞானிகள் தோரயாமாக 60 முதல் 80 பயிர்கள் மட்டும் இருக்கும் என்கின்றனர்.

வரும் 2045 ம் ஆண்டு உணவு தயாரிக்கும் சக்தி 40 சதவீதமாக குறையும் என்கின்றனர். மக்கள் தொகை 9 பில்லியனுக்கு மேல் வரும் போது, மக்கள் தொகைக்கான உணவு உற்பத்தி குறைந்து இருக்கும். இப்போது இதை மீட்டுடெடுக்க வாய்ப்பு இருக்கின்றது. சில பாலிசி மாற்றம் மூலம் மண்வளம் பாதுகாக்க முடியும்

உலகம் முழுவதும் 730 அரசியல் கட்சியினருக்கு கடிதம் எழுதி இருக்கின்றேன். மண், மண்ணில் உள்ள உயிர்கள் குறித்து தேர்தல் வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். 3 தன்னார்வ அமைப்புகள் ஈஷாவுடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்கின்றோம். இசை, சினிமா, விளையாட்டு என அனைத்துதுறை வல்லுனர்களும் நம்முடன் இருக்கின்றனர்.

வரும் 21 ம் தேதி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த 100 நாட்களில் 27 நாடுகளுக்கு 30 ஆயிரம் கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணிக்க இருக்கின்றேன்.

இந்த நேரத்தில் பல சவால்களை கடக்க வேண்டும். பனி, வெயில், மழை, போர் என அனைத்து சூழல்களையும் கடந்து இந்த பயணம் இருக்கும். கடந்த 2 வருடத்தில் எங்கே போனாலும் எல்லாரும் மண் பாதிப்பு தெரிகின்றது.

உக்ரைனில் போர் காரணமாக சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் மத்திய அரசுடன் சேர்ந்து உதவி வருகின்றோம். தங்குமிடம், போக்குவரத்து போன்றவை ஏற்படுத்தப்படுகின்றது . தற்போது உக்ரைனில் ஏற்பட்டு இருப்பது கஷ்டமான நிலை. ரஷ்யாவுடன் பேசி வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றார்கள்

ரஷ்யா வழியாக இந்தியர்களை கொண்டு வரும் முயற்சி நல்ல முயற்சி. தூரம் அதிகம் என்றாலும் பாதுகாப்பானது. இன்னும் 11 ஆயிரம் பேர் அங்கிருகின்றனர்

நீர்நிலைகள் நன்றாக இருக்க மண்ணை காக்க வேண்டும். 84 சதவீதம் தண்ணீர் விவசாயத்திற்கு போகின்றது. மண்ணில் இருக்கும் உயிர்சத்து 68 ஆக இருக்கின்றது. இதை 8 முதல் 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். உயிர்சக்தி வந்து விட்டால் 100 லிட்டர் நீரில் நடைபெறும் விவசாயத்தை 30 லிட்டரில் செய்ய முடியும் என தெரிவித்தார்,