முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.