ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, முதல்வர் அலமேலு அனைவரையும் வரவேற்றார்.

எஸ் என் ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயண சுவாமி மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் சங்கர் வேணுகோபால் ஆகியோர் கையப்பமிட்டனர்.

இக்கல்லூரியின், சிறப்பு பாடத்திட்டங்களில் வளர்ந்துவரும் களங்களான சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ஆக்குமெண்டெட் மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி, ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், சென்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்சார வாகனம் ஆகியவற்றை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் உதவி கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள் இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்பு பெறவும், எலக்ட்ரிக் வாகனம், இண்டஸ்ட்ரி இம்மெர்சென் திட்டங்கள் மற்றும் ஆலோசனைப் பணிகளின் களத்தில் சிறந்து விளங்கும் மையத்தை உருவாக்க இந்த ஒப்பந்தம் பயன்பெறும். அதன்மூலம் மேற்கூறிய களங்களில் சிறப்பு சான்றிதழ்கள் மாணவர்கள் பெற உறுதுணையாக இருக்கும்.

கல்லூரியின் இண்டஸ்ட்ரி கனெக்ட் ஆலோசகர் கணேஷ், மின்னணு மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் கதிர்வேல் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.