தமிழ்நாடு மாநில வீரசைவ பேரவை குடும்ப விழா

மகான் ஸ்ரீ பசவர் ஜெயந்தி  குடும்ப விழா இன்று(10.06.2018) கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. வீரசைவ சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்காக நடக்கின்ற இவ்விழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், 2018ஆம் ஆண்டு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற வீரசைவ சமூகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை பாராட்டி ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களும்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இவ்விழாவினை பேரூர் மடம் மருதாசல அடிகளார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு வீரசைவ பேரவை விழாவின் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீரசைவ மக்களை ஒன்றிணைக்கும் விழாவாக அமைந்துள்ளது என  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். இவ்விழாவில் வீர சைவ மக்களின் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் முதல்வரும் மத்திய உள்துறை அமைச்சருமான சுசில்குமார் சிண்டே (மும்பை ), தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மகாராஷ்டிராவைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர் துறை அமைச்சர் ஸ்ரீ விஜய் மித்ரப்ப தேஷ்முக், கோவை  சட்டமன்ற உறுப்பினர் PRG அருண் குமார் , சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மற்றும் வீரசைவ பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.