லயன்ஸ் கிளப் சார்பில் உதவிப் பொருட்கள்

கோவை காளப்பட்டி நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் ஃபெயிரா சார்பில் குழந்தைகள் பயன்பெறும் வகையில் முகக் கவசம், சானிடைசர் ஆகியவற்றை நேருநகர் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன் செந்தில்குமார் தலைமையாசிரியர் சீதாலட்சுமி அவர்களிடம் வழங்கினார். அருகில் ஆசிரியர்கள் சரோஜா, தங்கப்பழம், விஜயலட்சுமி மற்றும் மாணவ மாணவிகள்.