குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது

JRD ரியல்டோர்ஸ் சார்பாக ஏழை எளிய குழந்தைகளுக்கு பள்ளி செல்ல பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வழங்கும் விழா இன்று(18.05.2018) உக்கடம் மஜீத் காலனி பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், JRD நிறுவன இயக்குனர் தீபக் விக்னேஷ்வர், தலைவர் ராஜேந்திரன், ஜீவன்ஸ் குரூப் தலைவர் அஜீஷ், த.மு.மு.க. மாவட்ட தலைவர் கபீர், கோட்டைமேடு முன்னாள் பள்ளி தாளாளர் நசீர் ஆகியோர் கலந்து கொண்டு 150க்கும் மேற்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு உபகரணங்கலை வழங்கினர்.