கே.பி.ஆர் கல்லூரியில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ” காகித மடிப்பு நுண்ணோக்கி மற்றும் தொலை நோக்கி” பணிமனை நடைபெற்றது.

கோவை அஸ்ட்ரோ கிளப், KPRIET, தமிழ்நாடு அஸ்ட்ரோனாமிகல் சயன்ஸ் சொசைட்டி, மதுரை ஈடன் சயின்ஸ் கிளப், அரசு மேல்நிலைப்பள்ளி ஒத்தக்கால்மண்டபம், கோயம்புத்தூர் மண்டல அறிவியல் மையம் ஆகியவற்றின் மூலம் பயிற்சி நடத்தப்பட்டது.

இவ்விழாவினை கல்லூரின் தலைவர் கேபிராமசாமி, கல்லூரின் முதல்வர் அகிலா ஆகியோர் வழிகாட்டுதலில் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .

இப்பயிற்சியில் கருத்தாளர்களாக மதுரை ஈடன் சயின்ஸ் கிளப் நிறுவனர் பாண்டியராஜன், தமிழ்நாடு அஸ்ட்ரோனாமிகல் சயின்ஸ் சொசைட்டி தலைவர் மனோகர், கோயம்புத்தூர் மண்ட அறிவியல் மைய அலுவலர் பழனிசாமி, KPRIET- S&H துறைத் தலைவர் கீதா, RMSA ADPC கண்ணன் , PSG தொழில்நுட்ப கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சக்திவேல் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வானியல் ஆர்வலர் ரமேஷன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு மதுரை ஈடன் சயின்ஸ் கிளப் சார்பாக காகித மடிப்பு நுண்ணோக்கி இலவசமாக வழங்கப்பட்டது.