வங்கிகளுக்கு வாரம் 2 நாட்கள் விடுமுறையா?

சமூக வலைத்தளங்களில் வரும் ஜூன் 1 முதல் வங்கிகளுக்கு அனைத்து சனி மற்றும் ஞாயிறுகளில் விடுமுறை அளிக்கப்படுவதாக பரவப்படும் செய்தி தவறானது என வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

வங்கி ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட வேண்டும் என தொடர் கோரிக்கைகளை விடுத்து வந்தனர். இதன்மூலமாக வங்கிகளுக்கு மாதந்தோறும் 2 மற்றும்  4-ம் சனிக்கிழமைகளில் முழு நேர விடுமுறை அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு அதன்படி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜூன் 1 முதல் வங்கிகளுக்கு வாரம் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தவறான தகவல் பரவி வருகிறது.