குழந்தைகளுக்கு டயாப்பரால் ஆபத்து!

தாய்மார்கள் சிலர் குழந்தைகளை பல மணி நேரம் டயாப்பரில் வைத்திருக்கின்றனர். அதிலும் தொலை தூர பயன்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை. அவ்வாறு நெடுநேரம் உபயோகிக்கப் படுவதனால் சிறுநீர், மலம் ஏற்படுத்தும் ஈரப்பதத்தால் குழந்தையின் சருமத்தில் `டயாப்பர் டெர்மடிடிஸ்’ (Diaper Dermatitis) எனப்படும் தோல் அலர்ஜி ஏற்படும்  என்கின்றனர் மருத்துவர்கள்.

கோடைக்காலத்தில் அதிகநேரம் பயன்படுத்துவதால் வியர்வை, சிறுநீர், மலம் காரணமாக தோல் அரித்தல், தோல் சிவத்தல், தோல் தடித்தல் ஆகியவை ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். எனவே, குறைந்தபட்சமாக அரை மணி நேரத்திற்கு ஒரு முறை டயாப்பரை மாற்றிவிட்டால் குழந்தைகளை Fungal Infection நோய்களில் இருந்து காப்பாற்றிவிடலாம்.