2022-ல் 32-க்கும் அதிகமான அரசு தேர்வுகள் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2022-ம் ஆண்டிற்கான பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டு 32-க்கும் அதிகமான தேர்வுகள் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் அரசுவேலையில் 11000 -க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளது. குரூப் 2 ஏ-வில் மொத்தம் 5831 காலிப்பணியிடங்களும், குரூப் 4-ல் 5,244 காலிப்பணியிடங்களும் உள்ளது. தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியான பிறகும் கூட இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ- தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி 2022-ல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. விஏஓ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்புகள் வெளியான அடுத்த 75 நாள்களில் தேர்வுகள் நடத்தப்படும். குரூப் 4 தேர்வு எழுதுபவர்கள் தமிழ்மொழி தேர்வில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

 

SOURCE: NEWS 18 TAMILNADU