ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் பேட்மிண்டன் உள் விளையாட்டரங்கம் திறப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், சர்வதேச தரத்திலான பேட்மிண்டன் உள் விளையாட்டரங்கம் இன்று திறக்கப்பட்டது.

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், சர்வதேச தரத்திலான பேட்மிண்டன் உள் விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்து, சர்வதேச உள் விளையாட்டு அரங்கைத் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து அண்மையில் ஹங்கேரி, பக்ரைன் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்கள் வென்ற, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சதீஷ்குமார், ஆத்யா வாரியார், சஞ்சய் ஸ்ரீவத்சவா ஆகியோரை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி,  இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் சி.வி.ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் கே.வடிவேல், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முதல்வர் ரவி, ஸ்ரீ ராமகிருஷ்ணா சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பிரசில்லா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.