பி.எஸ்.ஜி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரியில் 1961 ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து முடித்த முன்னாள் மாணவர்களின் வைரவிழா ஆண்டு சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் டெக்ஸ்டைல் துறையைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் துணைவியாருடன் கலந்து கொண்டனர். கல்லூரியின் நிறுவனர் ஜி. ஆர் தமோதரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் 60 ஆண்டுகள் கழித்து தங்கள் நண்பர்களைச் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். சிலர் வாழ்க்கையில் தாங்கள் கடந்து வந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த ஆண்டில் படித்தவர்களில் பலர் அரசு அதிகாரிகளாகவும், சுய தொழில் செய்தவர்களாகவும், பொறியாளராகவும் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார், பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் பிரகாசம், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.