கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கோவை ஹார்ட் ரிதம் கருத்தரங்கு

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கார்டியாக் பேசிங் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி பிரிவு சார்பில் தொடர்ந்து 6-வது முறையாக, சீரான இருதய இயக்கம் தொடர்பான ஹார்ட் ரிதம் கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.

செல்களால் தூண்டப்படும் ஒருவித மின்னோட்ட சக்தியினால் இருதயம் இயங்குகிறது. இந்த எலக்ட்ரிகல் சிஸ்டம் சீரற்று இருக்கும்போது இருதய நோய் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இருதயம் துடிப்பது என்பது வழக்கத்தை விட மெதுவாக நடைபெறலாம் அல்லது வேகமாக துடிக்கலாம். இவ்வாறு இருப்பது உயிருக்கு ஆபத்தானதாகும். உரிய சிகிச்சை அளிக்காமல் இருந்துவிட்டால் மயக்கம் ஏற்படும், மூச்சுவிட சிரமம் இருக்கும், சில வேளைகளில் அது உயிருக்கே ஆபத்தாய் முடியலாம்.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் இருதயத் துடிப்பைக் கண்காணித்து சீராக்கும் கார்டியாக் பேசிங் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி பிரிவு செயல்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற மருத்துவக் குழுவினர் நோயாளியின் நிலைமைக்கேற்ப பிரத்யேக சிகிச்சைகள் அளிக்கின்றனர், இங்கு எம்ஆர்ஐ பேஸ்மேக்கர்கள், மின்காந்த அலை கண்காணிப்பு கருவி, முப்பரிமாண மேப்பிங் சிஸ்டம் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ சாதனங்கள் உள்ளன. மிகுந்த சிக்கலான நோய்களுக்கும் உலகத்தரமான சிகிச்சை வசதிகள் உள்ளன.

சீரற்ற இருதய துடிப்பை சீராக்குவதற்கென்றே தமிழகத்தில் முதல்முறையாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை, க்ரையோஅப்லேஷன் என்ற அதிநவீன மருத்துவக் கருவியைத் தருவித்துள்ளது. இவ்வித சிகிச்சைக்காக ஒரு பிரத்யேக சிகிச்சை மையத்தையும் (CENTER OF EXCELLENCE OF ATRIAL FIBRILLATION) ஏற்படுத்தியுள்ளது. க்ரையோஅப்லேஷன் என்பது மிகவும் சிக்கலான சீரற்ற இருதய நோய்களுக்கும் சிறந்த முறையில் பாதுகாப்பான சிகிச்சை அளித்திடும் மருத்துவமுறையாகும். இந்த அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் தற்போது கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக செயல்படுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டு செயலாளரான டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ், எலக்ட்ரோபிசியாலஜி துறையில் ஏற்பட்டு வரும் புதிய முன்னேற்றங்களை அறிந்துகொள்ள இந்த மாநாடு ஒரு நல்வாய்ப்பாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்டார்.

இந்த மருத்துவ மாநாட்டில் பல அரிய மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. டாக்டர் சாமுவேல் ஆசிர்வாதம் (அமரிக்கா), டாக்டர் ராஜீவ் பதக் (ஆஸ்திரேலியா), டாக்டர் பியோத்ர் போனிகோவ்ஸ்கி (போலந்து), டாக்டர் வில்பிரட் முல்லன்ஸ் (பெல்ஜியம்) மற்றும் டாக்டர் சித்தார்த் ககோதர் (அமரிக்கா) ஆகிய மருத்துவ நிபுணர்கள் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து உரை நிகழ்த்தினர். தேசிய அளவில் 50-க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களும் 500-க்கும் அதிகமான மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.

மாநாட்டையும் கருத்தரங்கையும் துவக்கிவைத்து உரையாற்றிய கேஎம்சிஹெச் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறியதாவது: கடந்த ஆறு வருடங்களாக கேஎம்சிஹெச் மருத்துவமனை சீரற்ற இருதய நோய் குறித்து தொடர்ந்து கருத்தரங்குகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் தற்போது மக்கள் தங்கள் வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நோயாளிக்கு அதிநவீன மருத்துவம் மூலம் உரிய சிகிச்சை வசதிகள் கிடைத்திட கேஎம்சிஹெச் முழுமுயற்சிகள் எடுத்து வருவதாகவும் கூறினார்.

நமது மருத்துவமனையில் செயல்பட்டு வரும் எலக்ட்ரோபிசியாலஜி துறை உரிய நேரத்தில் உரிய சிகிச்சை அளித்து நோயாளிகள் இருதய நலன் காப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.