பிஎஸ்ஜி பிஸியோதெரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பிஎஸ்ஜி பிஸியோதெரபி கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று (24.04.18) பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதில், 137 இளநிலை மற்றும் 15 முதுநிலை பட்டதாரிகள் பட்டம் பெற்றுக் கொண்டனர். பிஎஸ்ஜி பிஸியோதெரபி கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ஆர்.மகேஷ் வரவேற்புரையாற்றினார். நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக ஸ்ரீ சுகம் பிஸியோதெரபி நிறுவனம் பிரைவேட் லிமிடெட் தலைவர் மற்றும் இயக்குனர் சி.ஆனந்தஜோதி எம்.பி.டி பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். அபர்ணா பிரேம்ராஜ், சினேஹா, சஜிதா ஆகியோர் மேல்நிலை கல்வியில் ஒட்டுமொத்த முதன்மைக்கான விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். அடிப்படை பிஸியோதெரபி பாடத்துறையின் துறைத் தலைவர் கே.சரவணன் நன்றியுரை வழங்கினார்.