தமிழ்நாடு வேளாண் பல்கலை: இளமறிவியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் தேதி ஒத்தி வைப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (02.11.2021) வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

நிர்வாக காரணங்களினால் தரவரிசைப் பட்டியல் வெளியீடு, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.