ரத்தினம் கல்லூரி சார்பில் மலைவாழ் மக்களுடன் வன தீபாவளி

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் மற்றும் இயற்கை இயக்கம் சார்பாக பொள்ளாச்சி ஆனைமலைக்கு அருகே அமைந்துள்ள சார்க்கார்பதி என்ற ஊரில் உள்ள மலைவாழ் மக்களுடனும், உடுமலை அமராவதியில் உள்ள மலைவாழ் மக்களுடனும் வன தீபாவளி கொண்டாடப்பட்டது.

மலைவாழ் குழந்தைகளுக்கான, எளிமையாகக் கல்விக் கற்றுக் கொடுக்கும் வகையில், அங்கன்வாடி அமைப்பாளருக்கு மணிச்சட்டம், உலக வரைபடம், இந்திய வரைபடம், எழுத்துப் பலகை ஆகியவைகள் வழங்கப்பட்டது. மலைவாழ் மக்களுக்கு இனிப்புகள், ஆடைகள், பள்ளி உபகரணங்கள் வழங்கி தீபாவளி கொண்டாடப்பட்டது.

மலைவாழ் மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் மற்றும் இயற்கை இயக்கம் சார்பாக இது போன்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. ரத்தினம் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் மற்றும் முதல்வர் முரளிதரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

வனதீபாவளியில் கல்லூரியின் 50 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினால் 300 மலைவாழ் மக்களும், பள்ளியில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் 100 பேர் பயன் அடைந்தது குறிப்பிடத்தக்கது.