இந்தியன் வங்கி சார்பில் லோன் திருவிழா

இந்தியன் வங்கி கோவை மண்டலம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குதல், வீடு மற்றும் கார் லோன் திருவிழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் இம்ரான் அமின் சித்திக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, இந்தியன் வங்கி மிகவும், பழமையான வங்கி. வாடிக்கையாளர் தான் வங்கியின் முதுகெலும்பு. நீங்கள் வாங்கும் இந்த சுய உதவிகடன் மூலம் உங்களின் பொருளாதாரத்தை உயர்திக் கொள்ள வேண்டும். பெண்களின் சுய முன்னேற்றத்தில் தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது.

இந்த விழாவில் மட்டுமின்றி கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து இந்தியன் வங்கி கிளைகளிலும் 198 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.8 கோடியே 85 லட்சம் கடனாக வழங்குவதில் பெருமை கொள்கிறோம். வீடு மற்றும் கார் கடன்களுக்காக ரூ.18 கோடி வழங்குகின்றோம். இதற்கான குறைந்த வட்டி விகிதம் முறையே 6.8 மற்றும் 6.9 என நிர்ணயம் செய்துள்ளோம் என்று கூறினார்.

விழாவில் இந்தியன் வங்கியின் கள பொது மேலாளர் கணேசராமன், துணை பொது மேலாளர் ராம் ஸ்வரரூப் சர்கார், கோவை மண்டல மேலாளர் சுப்பிரமணியன், துணை மண்டல மேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட இந்தியன் வங்கி நிர்வாகிகள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.